அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் ஒன்றான கோலாராடோவில் உள்ள சேவரன்ஸ் கிராமத்தில் உள்ள ஒன்பது வயது சிறுவன் நூற்றாண்டு தடையை எதிர்த்து அதில் வெற்றியும் கண்டுவிட்டான். அவன் பெயர் டானே. நமக்கு அது ஒரு சிறிய விஷயமாக தெரியும். ஆனால் அது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயம். பனிக்காலம் தொடங்கினாலே உலகம் முழுக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாகிவிடுவார்கள், விளையாடும் விஷயத்தில். ஏனென்றால் அப்போதுதான் பனியை வைத்து ஸ்னோபால், பனிசிற்பம் போன்றவற்றை வைத்து விளையாடமுடியும். கடந்த நூற்றாண்டுகளாக சேவரன்ஸ் கிராமத்தில் பனியை வைத்து விளையாடக்கூடாது என்ற தடை இருந்து வந்தது. அந்த ஒன்பது வயது சிறுவன் உடைத்தது இந்த தடையைத்தான்.
அந்த ஊரிலுள்ள அதிகாரிகளிடம் முறையிட முடிவெடுத்த சிறுவன் அங்குள்ள காவல்துறையினரிடம் இன்றைய குழந்தைகளுக்கு வெளியே விளையாட அனுமதி கிடைப்பதில்லை. இது தொடர்வதால் குழந்தைகளுக்கு ஏ.டி.ஹெச்.டி., ஆன்சைடி, போன்றவைகளும் அதுபோன்ற இன்னும் பிற உளவியல் பிரச்சனைகளும் வருகிறது. இங்கிருக்கும் குழந்தைகளுக்கும் உலகத்திலுள்ள மற்ற குழந்தைகளைப்போல பனியில் விளையாட விருப்பம் இருக்கிறது என முறையிட்டான்.
இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் பனிபந்து எறிவதற்கான தடை சட்டத்தை நீக்கினர். தனது முதல் பனிப்பந்தை வீசி விளையாடிய டானே நான் கண்ணாடிகளையெல்லாம் குறிவைக்க மாட்டேன். என்னுடைய ஒரே குறி என்னுடைய சின்னத்தம்பி மட்டுமே என செய்தியாளர்களிடம் உற்சாகமாக கூறியுள்ளான்.