விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை! - டீஸ்டா செடல்வாட் வலியுறுத்தல்
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்காகவும் செயல்படுவதன் மூலமே மதவெறிக்கும், சாதியத்திற்கும் எதிரான போராட்டத்தை விரிவான முறையில் மேற்கொள்ள முடியும் என்று மனித உரிமைப் போராளி டீஸ்டா செடல்வாட் கூறினார். வர்க்கம், சாதி, மதவெறி இவற்றுக்கிடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
குஜராத்தில் 2002ல் நடத்தப்பட்ட மதவெறி வன்முறைகளில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக நீதிமன்றப் போராட்டத்தை நடத்தி வருபவரான, அமைதி மற்றும் நீதிக்கான குடிமக்கள் அமைப்பின் செயலாளர் டீஸ்டா செடல்வாட் சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் திங்களன்று (ஜன.15) அவருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அவர், “சமுதாயத்தின் அனைத்துத் தளங்களிலும் இந்துத்துவா சக்திகள் ஊடுறுவியிருக்கும் நிலையில் மதச்சார்பின்மைக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும் செயல்படும் இயக்கங்கள் புனிதவாதம் பேசிக்கொண்டிராமல் விரிந்த ஒற்றுமையைக் கட்டியாக வேண்டும்” என்றார்.
இந்து மத நம்பிக்கை வேறு, இந்துத்துவா அரசியல் வேறு, இஸ்லாமிய மதம் வேறு, இஸ்லாமிய அடிப்படைவாதம் வேறு, ஜூடாயிசம் (யூதமத ஆதிக்கம்) வேறு, யூத மக்களின் உரிமைகள் வேறு என்ற புரிதலோடு செயல்படுவது மட்டுமல்லாமல், அந்தப் புரிதலை மக்களிடையே பரப்பவேண்டிய தேவையும் உள்ளது என்றார் அவர்.

பொதுச்சொத்தைக் கடத்தும் பாசிசம்
பாசிசம் என்பது மத ஆதிக்கம், இன ஆதிக்கம் மட்டுமல்ல; தனி மனிதரைப் பெரியதொரு சர்வாதிகார சக்தியாகக் கட்டமைப்பது மட்டுமல்ல. மக்களின் பொதுச் சொத்துகளைத் தனியாருக்குக் கடத்துவதும் பாசிசத்தின் செயல்திட்டமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக இந்திய ரயில்வே மெல்லமெல்லக் கொல்லப்படுகிறது. அதன் நிலம் உள்ளிட்ட சொத்துகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவது உள்ளிட்ட இன்றைய காட்சிகளை இதனோடு இணைத்துப் பார்க்கவேண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு குஜராத்தின் தலித் மக்கள் எழுச்சியை வெளிப்படுத்திய ஜிக்னேஷ் மேவானி தலைமையிலான உனா பேரணி பற்றிக் குறிப்பிட்ட அவர், “2002ல் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நரோடா பாட்டியா பகுதியில் தலித் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து ஊர்வலமாக வந்தனர். தலித் மக்கள் கையில் பிடித்திருந்த அட்டைகளில், அந்த வன்முறையில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்துகொண்டு தாக்கியதற்கு மன்னிப்புக் கேட்டுகொள்வதாக எழுதப்பட்டிருந்தது. உனா எழுச்சியின் பெரும் வெற்றிக்கு இந்த ஒருமைப்பாடும் ஒரு முக்கியமான காரணம்” என்றார்.
தலித் மக்கள் தங்களை இவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாமல்தான், சாதிய ஆதிக்கவாதிகளின் சங் பரிவார அமைப்புகள், இந்த ஜனவரி 1ல், மஹாராஷ்டிராவின் பீமா கோரிகாவுன் கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன் தங்களை இழிவுபடுத்திய ஆதிக்க சாதியினருக்கு எதிரான போரில் வெற்றிபெற்றதைக் கொண்டாடக் கூடியபோது வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் உரிமைக்காக
எல்லா மதங்களிலும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் பொதுவானதாக இருக்கின்றன. ஆகவே, பெண்களின் சமத்துவ உரிமைகளுக்காகவும், ஆதிவாசிகள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்காகவும், நீதி மறுக்கப்படும் அனைத்துப் பகுதியினருக்காகவும் ஒன்றுபட்ட விரிவான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தகுதி அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட ரோஹித் வெமுலா தற்கொலையின் பின்னணியில் உள்ள சாதிய வன்மத்தை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்றார்.

பள்ளிப் பாடங்களில் கூட நுட்பமான முறையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பகைமைக் கருத்துகளும் பொய்யான தகவல்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று கூறிய அவர், அவற்றைக் கண்டறிந்து அம்பலப்படுத்தவும் அப்புறப்படுத்தவும் ‘கோஜ்’ (தேடல்) என்ற திட்டத்தைத் தொடங்கியிருப்பது பற்றித் தெரிவித்தார்.
காந்தியோடு கடுமையாக மாறுபட்டவர்தான் அம்பேத்கர். ஆனால், காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, அடுத்த மிகக்குறுகிய நேரத்தில் பதற்றத்தோடும் கவலையோடும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த 5 தலைவர்களில் அம்பேத்கர் ஒருவர். இத்தகைய செய்திகள் மக்களிடம் கொண்டுசெல்லப்படவே இல்லை. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில்தான் இருப்போம் என்று அலகாபாத் முஸ்லிம் மன்னர் குடும்பமும் மக்களும் அறிவித்தது உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்கள் மறைக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் கூறினார்.
நாடு தழுவிய மதச்சார்பின்மைப் பாதுகாப்பு இயக்கத்தில் தமிழகம் முக்கியப் பங்காற்ற முடியும். மத்திய அமைச்சர் முதல் அடிமட்டத்தவர்கள் வரையில், அரசமைப்பு சாசனத்தின் மதச்சார்பின்மைக் கோட்பாட்டைத் தாக்கிப் பேசுகிறார்கள். அரசமைப்பு சாசனத்தையே மாற்றுவதற்காகத்தான் தாங்கள் வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இப்படிப் பேச முடியுமா என்று நீதிமன்றம் சொல்லவேண்டும், அதற்கான முயற்சிகளைத் தமிழகத்திலும் மேற்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நீதிக்காக போராடினால்
சிறப்புரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, இந்தியா அனைவருக்குமான நாடு என்ற உணர்வையும் நிலையையும் உருவாக்க ஒன்றுபட்ட இயக்கங்கள் வலுப்பெற வேண்டும் என்றார். “நீதிக்காகப் போராடுகிறவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதற்கு மக்கள் ஒற்றுமையே தீர்வு” என்றார் அவர்.
நீதிபதி லோயா திடீர் மரணம் குறித்து முதலில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தார்கள். வழக்கு நடந்துகொண்டிருக்கிறபோது அவரது மகன், தனது தந்தையின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று சொல்கிற வகையில் நிகழ்வுகள் நகர்த்தப்படுகின்றன. ஆயினும் அவரது உறவினர்கள், அவரது மரணத்தில் இப்போதும் தங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது என்று உறுதிபடக் கூறுகிறார்கள் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
பெரியார்கள் அங்கே இல்லாததால்
மூத்த வழக்குரைஞர் அருள்திரு சேவியர் அருள்ராஜ் தமது சிறப்புரையில், “பெரியார்கள் பிறக்காததால்தான் குஜராத்திலும் இதர சில வட மாநிலங்களிலும் மதக்கலவரங்கள் நடத்தப்படுகின்றன” என்றார். பாசிசம் சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆபத்தானதல்ல. பெரும்பான்மை மதம் சார்ந்தோர் உள்ளிட்ட வெகுமக்கள் அனைவருக்குமே அது அபாயகரமானதுதான். உலக கார்ப்பரேட் கட்டமைப்புடன் கைகோர்த்து வருகிற பாசிச அச்சுறுத்தலை எதிர்த்து உரத்த குரல் எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தலைமை தாங்கிய காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் தாவூத் மியாகான், “இத்தாலி மக்கள் பாசிசத்தை முறியடித்தது போல் இந்திய மக்களும் முறியடிப்பார்கள்” என்று கூறினார்.
ஜனநாயகரீதியாக வந்த பாசிசம் சர்வாதிகார பாசிசத்தை விட ஆபத்தானது என்று சொல்கிறார்கள். ஆனால், இத்தாலியில் முசோலினியும் அப்படித்தான் வந்தார். அவர் விரட்டப்பட்டார். இந்தியாவில் தலைதூக்கும் பாசிச அபாயமும் மக்களால் விரட்டப்படும் என்றார் அவர்.
அவையினர் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு டீஸ்டா பதிலளித்தார். தமிழக ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் இந்தச் சந்திப்பு நோக்கம் குறித்து அறிமுக உரையாற்றினார். செயல்பாட்டுக்குழு உறுப்பினர் ஆய்வாளர் தீபா வரவேற்றார். மேடையின் சென்னை பொறுப்பாளர் ஜி. செல்வா நன்றி கூறினார். பத்திரிகையாளர் அ. குமரேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கல்வியாளர்கள் வே. வசந்திதேவி, சாதிக், பேராசிரியர் ஹாஜாகனி உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டார்கள்.
- அ.குமரேசன்
மூத்த பத்திரிகையாளர்