காவிரி மேலாண்மை என்ற வார்த்தை உச்சநீதிமன்ற தீர்ப்பில் இல்லை என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
காவிரி மேலாண்மை என்ற வார்த்தை உச்சநீதிமன்ற தீர்ப்பில் இல்லை. தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. 4 மாநில தலைமை செயலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நிச்சயமாக நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் வகுக்கும். நீதிமன்ற தீர்ப்பில் ’ஸ்கிம்’ என்கிற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே நிச்சயம் அதனை மத்திய அரசு நிறைவேற்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.