அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் விமானத்தின் கதவைத் திறந்தது ஏன்? ஏன்? ஏன்? என தற்பொழுது தெரிய வந்துள்ளது. அனைத்திற்கும் காரணம் கொடைக்கானல் பகுதியில் விளையும் ஒருவித போதைக்காளான்தான் எனச் சொல்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
பா.ஜ.க.வை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது உறவினர் கரூர் மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த சக்தி. தமிழ்நாடு போலீசார் ஒரு போதை நெட்வொர்க்கை பிடித்தபோது, அவர்களிடமிருந்த செல்போன் எண்ணை வைத்து இவரை கைது செய்கிறார்கள். இலங்கை உட்பட பல நாடுகளுக்கு கொகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருள்களை சப்ளை செய்யும் போதை கும்பலின் அங்கம்தான் இந்த சக்தி. சக்தியின் உறவினரான செல்வகுமார், சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் புகழைப் பாடுபவர். சக்தி கைது செய்யப்பட்டதும் தன்னை நோக்கி போலீசார் வருவார்கள் எனத் தெரிந்துகொண்ட செல்வகுமார், அண்ணாமலையிடம் சரணடைகிறார். அந்த செல்வகுமாருக்கு உடனடியாக பா.ஜ.க. நிர்வாகி பதவி கொடுக்கிறார் அண்ணாமலை. அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா, செல்வகுமார், அலிஷா என உருவாகியுள்ள அண்ணாமலையின் டீமில் முக்கியமான அங்கமாக செல்வகுமார் மாறுகிறார். இந்த அணி உருவாக்கத்தால் போலீஸ் நடவடிக்கையிலிருந்து செல்வகுமார் காப்பாற்றப்படுகிறார்.
அண்ணாமலை எப்பொழுதும் ஒரு ‘சைக்கோவைப் போல நடந்துகொள்கிறார். திடீரென நான் சாணக்கியன் எனக் கத்துவார். அடுத்த நிமிடம் மேஜையில் தலைவைத்துப் படுத்துக் கொள்வார். தினமும் ஏராளமான மாத்திரைகளை சாப்பிடுவார். இவருக்கு ஏதோ ஒரு மனநோய் இருக்கிறது அதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்கிறார் என பா.ஜ.க.வினர் மத்தியில் செய்தி பரவியது. அவருக்கு மன நோய் இல்லை. யூதர்கள் நாட்டை ஆள வேண்டுமென்றால் ஒரு வெறியுடன் இருக்க வேண்டும் என போதை மருந்துகளை சாப்பிடுவார்கள். அப்படி கொடைக்கானல் பகுதியிலிருந்து இயற்கையாக விளையும் காளான் வகையைச் சார்ந்த போதை மருந்தை அண்ணாமலை உட்கொள்கிறார் என அமர்பிரசாத் ரெட்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் விளக்கம் அளித்துள்ளார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.
விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறந்த டிசம்பர் பத்தாம் தேதிக்கு முந்தைய நாள் அண்ணாமலையும் பா.ஜ.க.வின் இளைஞர் அணி தேசியச் செயலாளருமான தேஜஸ்வி சூர்யாவும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு பிரபலமான சொகுசு ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். பத்தாம் தேதி திருச்சியில் நடந்த பா.ஜ.க. இளைஞரணி மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேஜஸ்வி சூர்யா பெங்களூரிலிருந்து வந்தார். அவருடன் அண்ணாமலையும் இணைய... ஆட்டம், பாட்டம், போதை என சகல விஷயங்களுடனும் அன்றைய இரவை இருவரும் கொண்டாடினார்கள். தேஜஸ்வி சூர்யா ஒரு பெண்ணுடன் இணைந்து இருப்பதை தனது Honey Trap ஸ்டைலில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிருங்கேரி சங்கரமடத்தின் ஆதரவாளர்கள். ஒட்டுமொத்த இந்தியாவையே சிருங்கேரி மடம் முழு ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. அதன் முக்கியப் பிரமுகர் கன்னட பிராமணரான பா.ஜ.க.வின் தேசியச் செயலாளரும், பா.ஜ.க.வை கட்டுப்படுத்த ஆர்.எஸ்.எஸ்ஸால் அனுப்பப்பட்ட நபரான பி.எல்.சந்தோஷ். அந்த பி.எல். சந்தோஷால் எம்.பி. ஆக்கப்பட்டவர்தான் தேஜஸ்வி சூர்யா. இவர் போதையில் பேசுவது பிரபலமான விசயமாக கர்நாடக மீடியாக்களில் அடிக்கடி விவாதிக்கப்படும். பெங்களூர் நகரம் வெள்ளத்தில் சிக்கியபோது, “நான் ஜாலியாக மசால் தோசை சாப்பிடுகிறேன்” என தேஜஸ்வி சூர்யா பேசினார். இது பெரும் விவாதத்துக்குள்ளானது. கோவிட் நேரத்தில் ‘பெங்களூரு மருத்துவமனைக்குள் இஸ்லாமியப் பணியாளர்கள் இந்து நோயாளிகளைத் தரக்குறைவாக நடத்துகிறார்கள்’ என தேஜஸ்வி சூர்யா போட்ட டிராமாவுக்கு எதிராக ஒட்டுமொத்த கர்நாடகமே கொந்தளித்தது.
இதே தேஜஸ்வி சூர்யா, அரபுப் பெண்களை கொச்சைப்படுத்தி "95% அரபுப் பெண்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக ஆர்கசமே அடைந்ததில்லை' என்று எழுதிய ட்வீட் சர்வதேச அளவில் இஸ்லாமிய நாடுகளிடையே இந்தியாவுக்கு தலைகுனிவைத் தந்தது.
சிருங்கேரி மடம், குருமூர்த்தி தலைமையில் இயங்கும் காஞ்சி சங்கரமடத்தை அழிக்க நினைக்கிறது. அதற்காக தமிழக அரசியலுக்குள் பி.எல். சந்தோஷால் அழைத்து வரப்பட்ட அண்ணாமலைக்கும், தேஜஸ்வி சூர்யாவிடமிருந்து போதைப் பழக்கம் தொற்றிக்கொண்டது. பத்தாம் தேதி தலைக்கேறிய போதையுடன் திருச்சி செல்லும் விமானத்தில் ஏறிய அண்ணாமலையுடன், தேஜஸ்வி சூர்யா மற்றும் நான்கு பா.ஜ.க.வினர் இருந்தனர். அன்று என்ன நடந்தது என பா.ஜ.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த அரசகுமார் நம்மிடம் விவரித்தார்.
“காலை பத்து மணிக்கு திருச்சிக்கு செல்லும் அந்த சிறிய விமானத்தில் மொத்தம் 76 பயணிகள் மட்டுமே அமர முடியும். அந்த விமானத்திற்கு கடைசி நேரத்தில் நான் சென்றேன். விமான சிப்பந்திகள், எமெர்ஜென்சி கதவு அருகே அமர்ந்திருந்த அண்ணாமலையிடமும், தேஜஸ்வி சூர்யாவிடமும் மற்றுமுள்ள பயணிகளிடமும், ஏதேனும் விபத்து நேரிட்டால் எமெர்ஜென்சி கதவை எப்படித் திறப்பது என விளக்கினார்கள். ‘முதலில் ஒரு பாக்ஸ். அதன் பிறகு ஒரு ஹேண்டில். இரண்டையும் திறந்து ஹேண்டிலை இழுத்துவிட்டால் எமெர்ஜென்சி கதவு கையோடு வந்துவிடும். அதன் மூலம் வெளியேறலாம்’ என ஏர் ஹோஸ்டஸ் விளக்கிவிட்டு பின்பக்கமுள்ள கதவுகளை மூடிவிட்டனர்.
பயணிகள் வருகை முடிந்துவிட்டதால் விமானம் நகர்வதற்கு பெரிய ஒலியுடன் கூடிய எஞ்சின் இயக்கப்பட்டது. விமானம் புறப்படும் என நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், விமானப் பணிப்பெண்கள் பைலட் அறையை நோக்கி ஓடினார்கள். திடீரென விமானத்திற்குள் போலீசார் திபுதிபுவென நுழைந்தார்கள்.
“விமானத்தில் பெரிய லீக் இருக்கிறது என பைலட்டின் கம்ப்யூட்டர் தெரிவிக்கிறது. எனவே இந்த விமானத்தை இயக்க முடியாது அந்த லீக்கேஜ் சரி செய்யப்படுமா? அல்லது வேறொரு விமானத்தில் பயணிகள் அமர வைக்கப்படுவார்களா? என்பதை இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்யும்’’ என விமானப் பணிப்பெண் அறிவித்தார்.
விமானத்திற்குள் வந்த போலீசார் அண்ணாமலையையும், தேஜஸ்வி சூர்யாவையும் அவருடன் இருந்த பா.ஜ.க.வினரையும் தனியாக ஒரு பேருந்தில் விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். நான் உட்பட மற்ற பயணிகளை வேறொரு பேருந்தில் அமர வைத்து எங்களுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்தார்கள். அப்பொழுதுதான் அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் சேர்ந்து எமெர்ஜென்சி கதவைத் திறந்து அலேக்காக அந்தக் கதவைப் பெயர்த்தெடுத்ததால் ஏற்பட்ட லீக்கேஜை பைலட் கண்டுபிடித்துவிட்டார். அவர் அதைக் கண்டுபிடித்திருக்காவிட்டால் விமானம் பறந்திருக்கும். நேபாள நாட்டில் விபத்துக்குள்ளான விமானம் போல பயணிகள் 76 பேரும் இறந்திருப்போம். விமானியின் சாமர்த்தியத்தால் அண்ணாமலை அன் கோ செய்த வேலை கண்டுபிடிக்கப்பட்டது. பத்து மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாகி, பதினொன்றரை மணிக்கு புறப்பட்டது.
விமானத்தைச் சுற்றித் தீயணைப்பு வண்டிகள் உட்பட அனைத்து அவசரக்கால வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. விமானப் பொறியாளர்கள் அங்குலம் அங்குலமாக விமானத்தை சோதித்தார்கள். தேஜஸ்வி சூர்யாவும், அண்ணாமலையும் எதற்காக விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறந்தார்கள்? அவர்கள் தீவிரவாதிகளா? என தனியாக விசாரணை செய்தார்கள். அதன் பிறகு அவர்களது இருக்கைகள் மாற்றப்பட்டன. விமானம் புறப்பட்டுச் சென்றது” என்கிறார் அரசகுமார்.
இதுபற்றி இண்டிகோ நிறுவனம் சிவில் விமான போக்குவரத்துத்துறையின் டைரக்டர் ஜெனரலிடம் புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மத்திய உள்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா இருவரிடமும் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலையீட்டின் பேரில் இருவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் பா.ஜ.க. தலைவர்கள் போதையில் விமானத்தின் எமெர்ஜென்சி கதவை கழட்டி வைத்ததை மத்திய அரசு மறைத்துவிட்டாலும் விமான நிறுவனம் கொடுத்த புகார் ஒருமாதம் கழித்து விசாரணைக்கு வந்தது. “இப்படி ஒரு சம்பவம் நடந்தது அதை நாங்கள் விசாரிக்கிறோம்” என சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விமானத்தின் எமெர்ஜென்சி கதவுகளை அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் கழட்டியதை ஒத்துக் கொண்டனர். அவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டார்கள் என பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.