''இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்

கேளாய் பூமனமே…. ஹோ…''

எஸ்.பி.பி.யின் குரலில் இந்தப் பாடல் வரிகள் வாட்ஸ்-அப்களில் ஷேர் ஆனது. சிலர் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களிலும் வைத்திருந்தனர்.

Advertisment

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், 25.09.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மருத்துவமனையில் இருந்து அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. திரையுலகினர் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். நாளை 26.09.2020 காலை திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது என்ற செய்தி காட்சி ஊடகங்கள், இணையதளங்களில் வெளியானது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதயங்களில் இடியாய் இறங்கியது எஸ்.பி.பி.யின் மறைவு செய்தி.

Ad

இந்தநிலையில் திடீரென மாலை 4 மணிக்கு மேல் சென்னையில் மழை கொட்டியது. இசையை ரசித்தவர்கள் எல்லோரும் கண்ணீர் விட்ட நேரம். எங்கேயோ இருக்கிறோம், எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று நினைத்தோருக்கு, இங்கே இருந்தாலும் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று நினைத்தோருக்கு இந்த வானம் பொங்கி அழுதிருக்கிறது. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று இன்று காலைகூட பாரதிராஜா சொன்னார். அதேபோல்தான் இந்த இயற்கையும் எஸ்.பி.பி.க்காக பொங்கி அழுகிறது என்று ரசிகர்கள் கலங்கினர்.

Advertisment