Skip to main content

'மிசா சர்ச்சை' ஆதாரத்தை ஜெயகுமாருக்கு ரோட்டோரமா வந்து கொடுக்க கூட தயார் - அப்துல்லா தடாலடி!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக அக்கட்சியை சேர்ந்த இணையதள பிரிவு நிர்வாகி அப்துல்லாவிடம் நாம் பல்வேறு கேள்வியை முன்வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

திமுக தலைவர் ஸ்டாலின் அவசரகால கட்டத்தில் சிறைக்கு சென்று உண்மை தான், ஆனால் மிசா  சட்டத்தின் கீழ் அவர் சிறைக்கு செல்லவில்லை என்றும், ஷா கமிஷன் அறிக்கையில் அவர் பெயர் இல்லை என்று சிலர் கூறுவதை பற்றி உங்களின் கருத்து என்ன?


மிகத் தகவறான ஒரு கருத்தை வேண்டும் என்றே பரப்ப முயற்சிக்கிறார்கள். கைதாகவில்லை என்று கூறும் அவர்கள்தானே முதலில் ஆதாரத்தை காட்ட வேண்டும். உங்கள் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறினால் அவர்கள் தானே முதலில் ஆதாரத்தை காட்ட வேண்டும். குற்றச்சாட்டு கூறுபவர் ஆதாரத்தை காட்டாமல்  யார் மீது குற்றம்சாட்டுகிறமோ அவர்களே ஆதாரத்தை காட்டி தங்களை குற்றமற்றவர் என்று நிரூபித்துக் கொள்ளுங்கள் என்பது எந்தவகையில் நியாயம். அவர் மிசாவில் கைதாகவில்லை என்றால் எந்த வழக்கிற்கு சிறை சென்றார் என்று கூற வேண்டியதானே? எங்களிடம் அவர் மிசாவில் சிறை சென்றதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது. அது அனைத்தையும் தற்போது காட்டுகிறேன். முதலில் ஷா கமிஷன் அறிக்கையை பற்றி கூறுகிறா்கள்.  அது எப்போது அமைக்கப்பட்டது அதன் வரலாறு என்ன என்று அதை பற்றி பேசுபவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
 

 

gf



அந்த ஆணையம் ஜனதா அரசு அமைந்த பிறகு நெருக்கடி கால கொடுமைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட ஆணையம். அந்த ஆணையம் விசாரணை செய்துவந்த நிலையில், அதற்குள் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வருகிறார். அவர் வந்த பிறகு, அந்த ஆணைய அறிக்கைகளை அழித்து முடிந்ததுதான் அவர்களின் முழு வேலையாக இருந்தது.  இப்போது விக்கிபீடியாவில் தேடி பார்த்தால் கூட அது பற்றிய எந்த தகவலும் இருக்காது. இப்போது காட்டப்படும் அறிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செழியன் அவர்கள் வெளியிட்ட ஆவணத்தை காட்டுகிறார்கள். 80களில் முடிந்த போன ஒரு சம்பவத்தை அவர் 2010 ஆம் ஆண்டில் என் வீட்டில் ஷா கமிஷன் அறிக்கையின் சில பகுதிகள் இருப்பதாக கூறி அதனை அத்வானியை கொண்டு புத்தகமாக வெளியிட்டார். அதை பதிப்பிக்க பல்வேறு நிறுவனங்களும் முதலில் மறுத்தன அதன் உண்மையை தன்மையை காரணம் காட்டி. அதில் பாஜக, ஜனதா உறுப்பினர்களின் தகவல்கள் மட்டுமே இருக்கிறது. 

மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக வேறு எந்த மாதிரியான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளது? 

இதுதொடர்பாக அப்போது நீதிபதி இஸ்மாயில் தலைமையில் தமிழக  அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த விசாரணை ஆணையம் தாக்கல் செய்துள்ள அறிக்கைதான் இது. இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. இண்டாவது பெயராக ஸ்டாலின் அவர்களுடைய பெயர் இருக்கிறதே? இதை இல்லை என்று சொல்வார்களா? வேண்டும் என்றே அவருக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதெல்லாம் காலத்தின் முன் காணாமல் போகிவிடும். மிசா என்று யாருக்காது ஞாபகம் வருகிறது என்றால் அப்போது அனிச்சை செயலாக ஸ்டாலின் அவர்களுடைய பெயர் நினைவிற்கு வரும். எனவே அவர்களின் எந்த விளையாட்டும் அவரிடம் எடுபடபோவதில்லை. இது அரசாங்கத்தை கையில் வைத்திருக்கும் அவர்களுக்கு தெரியாதா? அமைச்சர் ஜெயகுமாருக்கு தெரியாதா? அரசு அவண காப்பகத்திற்கு சென்று பணம் கட்டினால் யாரும் இதனை வாங்கிக் கொள்ளலாம். இல்லை ஜெயகுமாரின் அலுவலகத்திற்கு கொண்டுவந்து கொடுக்க சொன்னாலும் நான் தர தயார். அல்லது ரோட்டோரமா வர சொன்னாலும் வந்து தர தயாராக இருக்கிறேன்.

 

Vijayan