நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்த கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் 33வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி. விரைவில் இந்த மாவட்டத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்படுவார்கள் என்றும் சட்டப்பேரவையில் கூறினார்.
சுதந்திரத்தின்போது இந்தியாவில் மாநிலங்களில்லை, அதற்கு பதிலாக மாகாணங்களாக இருந்தது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா வெள்ளையர்களிடமிருந்து விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம், மதராஸ் மாநிலமாக மாறி பின் 1967ஆம் ஆண்டில் தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது. விடுதலை அடைத்தபோது மதராஸ் மாநிலத்திலிருந்த மாவட்டங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 13 மாவட்டங்கள்தான். மெட்ராஸ், செங்கல்பட்டு, நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாநிலங்கள்தான் அவை.
இதனை அடுத்துதான் 13 மவட்டங்களாக இருந்தது, ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரிக்கப்பட்டு தற்போது 33 மாவட்டங்களாக மாறியிருக்கிறது. எந்த காலத்தில் எங்கிருந்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது என்று பார்ப்போம்.
இந்த 13 மாவட்டங்களை அடுத்து முதன் முதலாக பிரிந்த மாவட்டம் என்றால் சேலம் மாவட்டம்தான். 1966ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து சேலம் மாவட்டம் தனியாக பிரிந்தது.
தற்போது திருச்சியிலிருந்து மூன்று மாவட்டங்கள் பிரிந்துள்ளது. இதில் முதன் முதலாக பிரிந்த மாவட்டம் எது என்று பார்த்தால் புதுக்கோட்டை மாவட்டம்தான். இது 1974 தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
1979ஆம் ஆண்டு கோயம்பத்தூரிலிருந்து பிரிக்கப்பட்டது ஈரோடு.
1985ஆம் ஆண்டு மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இதே ஆண்டில் மதுரையிலிருந்து திண்டுக்கல் பிரிக்கப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி பிரிக்கப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டில் நார்த் ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை, வெல்லூர் என்று இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நாகப்பட்டினம் பிரிக்கப்பட்டது. பின்னர் 1996ஆம் ஆண்டில் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்பட்டது.
1993ஆம் ஆண்டில்தான் சவுத் ஆற்காடு மாவட்டத்திலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் என்று இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.
1995ஆம் ஆண்டில் திருச்சியிலிருந்து கரூர் மற்றும் பெரம்பலூர் என மேலும் இரண்டு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.
1996ஆம் ஆண்டில் மதுரையிலிருந்து தேனி பிரிக்கப்பட்டது.
1997ல் சேலத்திலிருந்து நாமக்கல் பிரிக்கப்பட்டது.
2004ல் தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரி பிரிக்கப்பட்டது.
2007ல் பெரம்பலூரிலிருந்து அரியலூர் பிரிக்கப்பட்டது.
2009ல் கோயம்புத்தூர் மற்றும் ஈரோட்டிலிருந்து திருப்பூரி என்ற மாவட்டம் பிரிக்கப்பட்டது.
தற்போது விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.