Skip to main content

பொம்பளைன்னா இளக்காரமா? -கொந்தளிக்கும் தி.மு.க.மா.செ.!

Published on 23/03/2018 | Edited on 24/03/2018
2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்த தி.மு.க. தலைமை, தெற்கிற்கு என்.பெரியசாமியையும் வடக்கிற்கு கழுகுமலை சுப்பிரமணியனையும் மா.செ.வாக நியமித்தது. பெரியசாமியின் மறைவுக்குப் பின், அவரது மகள் கீதாஜீவன் வடக்கு மா.செ.வானார். தெ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

“மழையில் மை ஊறி முட்டையில் இறங்கியுள்ளது” - அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

 'Ink got soaked in the rain and landed on the egg' - Minister Geethajeevan's explanation

 

அண்மையில் ஈரோட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டை கருப்பு நிறமாக அழுகிக் காணப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் செய்தியாளர்கள் இந்தப் புகார் குறித்து கேள்வி எழுப்பினர்.

 

அதற்குப் பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், ''பாஜக கட்சியிலிருந்து புகார் சொல்லியிருந்தார்கள். அதை நாங்கள் முறைப்படி விசாரித்து, முட்டை விநியோகிப்பவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். கிட்டத்தட்ட 96 முட்டைகள் மாற்றிக் கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்துவிட்டார். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திங்கள், புதன், வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் உபயோகிக்கப்படும் முட்டைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலர் சீல் வைப்பது வழக்கம். ஏனென்றால் பழைய முட்டையைப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காகச் சீல் வைக்க வேண்டும் என 2006-ல் இருந்து இந்த உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. அன்றைய தினம் 'தமிழ்நாடு அரசு' எனக் கருப்பு மையில் முத்திரை வைத்துள்ளார்கள். அந்த நேரத்தில் கனமழை பெய்துள்ளது. தார்ப்பாய் இல்லாமல் முட்டைகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளனர். அதில் நனைந்து கருப்பு மை ஊறி கருப்பு கலர் முட்டையில் இறங்கி உள்ளது'' என்றார்.

 

 

 

Next Story

'வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' - அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

'Those who are comfortable should volunteer to leave' - Minister Geethajeevan interviewed

 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் கிழக்கு பகுதியில் ஆயிரம் சாலையோர வாழ் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கமாக ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.

 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், ''அடுத்து வருகின்ற ஜூன் 24 வரை தொடர்ச்சியாக திமுக சார்பில் இந்த மாதிரியான சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழக முதல்வர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் மகளிர் உரிமைத்தொகை வராதவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்வதற்கும், விண்ணப்பம் செய்வதற்கும் நேரம் கொடுத்துள்ளார்கள். 30 நாட்கள் நேரம் கொடுத்துள்ளார்கள். நிறைய பேர் இதில் அப்பீல் செய்து கொண்டிருக்கிறார்கள். மணி ஆர்டர் மூலம் பணம் வருகிறது. சிலருக்கு  உங்களுடைய விவரங்கள் முழுமையாக அறியப்படவில்லை என பதில் வந்துள்ளது. அவர்களெல்லாம் மேல்முறையீடு பண்ண வேண்டும். சிலர் விண்ணப்பத்தை வாங்கி கைகளிலேயே வைத்திருக்கிறேன்; நான் ஆஸ்பத்திரியில் இருந்தேன்; டெலிவரிக்கு போய் விட்டேன் என சொல்பவர்களும் வரும் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர்கள் 'இந்த மாதம் ஆயிரம் ரூபாய் தொகையானது மேலும் உயர்த்தப்படுமா' என்ற கேள்விக்கு, ''ஒரு ரூபாய் கூட தராமல் இருந்தது. இப்பொழுது மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம். எனவே இது அடுத்து உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு நான் இன்று பதில் சொல்ல முடியாது. அனுமானத்தில் பதில் எதுவும் சொல்ல முடியாது'' என்றார். மேலும் ''வசதி படைத்தவர்கள் இருந்தால் அவர்களாக தானாக முன்வந்து விலக வேண்டும். எனக்கு இந்த ஆயிரம் ரூபாய் தேவையில்லை. நான் 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்; எனக்கு வருமானம் இருக்கிறது என விலக வேண்டும். இப்போதைக்கு தகுதி உள்ளவர்கள், தேவை உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து கொள்ளலாம், மேல்முறையீடு செய்து கொள்ளலாம்'' என்றார்.