![zaira wasim](http://image.nakkheeran.in/cdn/farfuture/pGEtPTcy7s_FLD71kpQQw4nMWnBXUdHh22zhkLDBmaQ/1590990157/sites/default/files/inline-images/zaira%20wasim.jpg)
கரோனா பாதிப்பு இன்னும் முடிவு பெறாத நிலையில் பாலைவன வெட்டுக்கிளி படை வட இந்தியாவில் பயிர்களை நாசம் செய்யத் தொடங்கிவிட்டன. இதனால் இந்திய விவசாயிகள் மிகவும் வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில், பாலைவன வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து நடிகை ஸாய்ரா வாசிம் குரானை மேற்கோள் காட்டி பகிர்ந்த கருத்து கடும் விமர்சனத்தைச் சந்தித்ததால் அவர் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கியுள்ளார். அதில்,
"ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், ரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்" என்று ஸாய்ரா வாசிம் ட்வீட் செய்திருந்தார்.
இந்தப் பதிவு பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. ஒருசிலர் ஸாய்ரா வாசிமின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், ஒருசிலர் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.