Skip to main content

பரியேறும் பெருமாளுக்கு பாட்டு எழுத மறுத்த யுகபாரதி! 

Published on 02/10/2018 | Edited on 02/10/2018

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இடம் பெற்ற 'கருப்பி' பாடல் பரவலாகப் பேசப்படுகிறது. இசையைத்தாண்டி அதன் கனமான வரிகள் அனைவரின் மனதிலும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளன. இந்தப் பாடல் உருவானது குறித்து அதை எழுதிய இயக்குனர் மாரி செல்வராஜ் நம்மிடம் பகிர்ந்தபொழுது கூறியது...

 

yugabharathi



"இந்தப் பாட்டை முதலில் யுகபாரதி அண்ணன் எழுதணும்னுதான் விரும்பினேன். அவர் கூட உட்கார்ந்து இருவரும் பாடல் குறித்து டிஸ்கஸ் பண்ணினோம். நான் அதை விவரிச்சேன், என்ன மாதிரி வரிகள் வேணும், என்ன விஷயங்கள் சொல்லப்பட வேண்டும்னு சொல்லிக்கிட்டே இருந்தேன். கிட்டத்தட்ட அந்த விஷயங்கள் எல்லாம் வரிகளாகவே இருந்தன. இதை உணர்ந்த யுகபாரதி அண்ணன், "மாரி, இந்தக் கதையிலும் சூழ்நிலையிலும் என்னை விட நீ சுதந்திரமாகவும் காத்திரமாகவும் இருக்க. நீ சொல்லி, அதை நான் எழுதி என் பேரை போடுறதுக்கு பதிலா, நீயே இதை எழுது" என்றார். நான், "அண்ணே, இல்லண்ணே நீங்க எழுதுங்க"னு சொன்னேன். அவர், "இல்ல, நான் எழுதல. நீ எழுதுறதுதான் சரியா இருக்கும்"னு சொன்னார். அப்படித்தான் இதை நான் எழுதினேன். இந்தப் பாடல் சொல்ற அரசியல் என்பது அதில் இருக்குற உண்மைதான். அதில் கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் அந்த மக்கள் தினம் தினம் கேட்கும் கேள்விகள்தான்". 

 

 

 

சார்ந்த செய்திகள்