Skip to main content

பிரபல நடிகை தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக அவதூறு பரப்பிய இளைஞர் கைது! 

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
lavanya

 

 

தமிழில் ‘பிரம்மன்’, ‘மாயவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது அதர்வாவுடன் இணைந்து தலைப்பிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். 

 

கடந்த மார்ச் மாதம் யூ-ட்யூப் சேனல் நடத்தி வரும் ஸ்ரீராமோஜு சுனிஷித் என்பவர் நடிகை லாவண்யா திரிபாதி தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தெலுங்கு திரையுலகில் சர்ச்சையான இந்த வீடியோ வைரலானது.

 

இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமோஜு தன்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருவதாக நடிகை லாவண்யா திரிபாதி ஹைதரபாத் சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஹைதரபாத் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையறிந்த ஸ்ரீராமோஜு தலைமறைவானார்.

 

இந்நிலையில், அவதூறு பரப்பிய ஸ்ரீராமோஜு சுனிஷித்தை போலீஸார் 26ஆம் தேதி கைது செய்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தனது யூ-ட்யூப் சேனலுக்கு அதிக சப்ஸ்கிரைபர்களை ஈர்க்கவே லாவண்யா திரிபாதி மீது அவதூறு பரப்பியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

முன்னதாக இதேபோல நடிகை தமன்னா மீதும் அவதூறு பரப்பியதாகவும், அவர் கண்டுகொள்ளதாததால் லாவண்யா பெயரை பயன்படுத்தியதாகவும் ஸ்ரீராமோஜு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்