Skip to main content

நந்திதா ஸ்வேதாவுடன் நடிக்கும் யோகிபாபு

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
யோகிபாபு - நந்திதா ஸ்வேதா

 

 

 

நோபல் மூவிஸ் சார்பாக எம்.சி.கலைமாமணி தயாரிக்கும் படம் 'டாணா'. ஹாரர் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக வைபவ்வும், ஹீரோயினாக நந்திதா ஸ்வேதாவும் நடிக்கின்றனர். மேலும் புதுமுக இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி இப்படத்தை இயக்கவுள்ளார். யோகிபாபு மற்றும் நடிகர் பாண்டியராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் எம்.சி.கலைமாமணி பேசும்போது... "ஹலோ நான் பேய் பேசுறேன்' போன்ற திரைப்படம் மூலம் ஹாரர் காமெடி ரக பேய் படத்தில் தன்னை நிரூபித்தவர் நடிகர் வைபவ். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னிச்சையான உணர்வை வெளிப்படுத்தக்கூடிய நடிகை நந்திதா ஸ்வேதா. யோகிபாபு மற்றும் பாண்டியராஜன் என இயக்குனரின் தேர்வு எல்லாமே சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, யோகிபாபு ஒரு வழக்கமான கதாப்பாத்திரமாக இல்லாமல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிப்பார். அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்படும்" என்றார். எச்.எஸ்.கான் இணை தயாரிப்பு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"உடலை அசைக்கக் கூட முடியாது" - அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நந்திதா

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

nandita swetha affected by rare disease

 

'அட்டகத்தி' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நந்திதா ஸ்வேதா, தொடர்ந்து ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, முண்டாசுப்பட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான, 'எம்ஜிஆர் மகன்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். கன்னடத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நந்திதா தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள 'ஹிடிம்பா' என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். 

 

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில், தனது சொந்த வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். அதில், அறிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "20 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதத்தை பாதிக்கும் பைப்ரோமியால்ஜியா என்ற தசை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு சிறிய வேலை செய்தால் கூட அது என் தசைகளில் பிரச்சனை ஏற்படுத்தும். இது சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாட்டை உருவாக்கும். உடலை அசைப்பதற்குக் கூட கடினமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி தான் ஹிடிம்பா படத்திற்காக உடல் எடையைக் குறைத்துள்ளேன்" என்றார். 
 

 

 

Next Story

தமிழில் பாடகியாக அறிமுகமாகும் மஞ்சு வாரியர்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

Manju Warrier is making her debut as a singer in Tamil

 

இந்தியாவில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் சந்தோஷ் சிவன். இவர் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு 'இனம்' படம் வெளியானது. அதன் பிறகு காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களை வைத்து 'சென்டிமீட்டர்' படத்தை இயக்கி வருகிறார். மலையாளத்தில் 'ஜாக் அண்ட் ஜில்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' மற்றும் 'சேவாஸ் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் மஞ்சு வாரியார் தமிழில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். 'சென்டிமீட்டர்' படத்தின் 'கிம் கிம்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் முதலாக தமிழில் இந்த பாடலை மஞ்சு வாரியர் பாடியுள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் சில பாடல்களை பாடியுள்ள மஞ்சு வாரியர் 'கிம் கிம்' பாடலின் மூலம்  தமிழில் பாடகியாக அறிமுகமாகிறார். 'கிம் கிம்' பாடலின் மலையாள லிரிக் வீடியோ ஒரு வருடத்திற்கு முன்பே வெளியானது குறிப்பிடத்தக்கது.