Skip to main content
Breaking News
Breaking

'பட்ட கஷ்டமே போதும். இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்' - விமல் திட்டவட்டம் !

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

விமல், ஓவியா நடிப்பில் வெளிவந்த 'களவாணி 2' படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது நாயகன் விமல் பேசியபோது... 

 

vimal

 

"இந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேரளாவில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அந்த நேரத்தில் இங்கே கூடவே இருந்து கவனிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. அந்த அளவுக்கு போராடி இரவு முழுவதும் கண்விழித்து இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். நல்ல கதை அமைந்தால் களவாணி 3 ஆம் பாகத்திலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அது இன்னும் 10 வருடம் கழித்தும் நடக்கலாம் அல்லது அடுத்த வருடமே நடந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்பது போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன். அந்த படம் படமாக்கப்பட்டதும் டைட்டில் வைக்கப்பட்டதும் எல்லாமே என் கையை மீறி நடந்த விஷயங்கள் என்பதால் அந்த படத்தில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். நான் நடித்துள்ள கன்னிராசி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஜான் பீட்டர்-சிங்காரவேலன் கூட்டணியில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறேன். தவிர மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான மை பாஸ் என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகும் சண்டைக்காரி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். எனக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் கேரளாவில் நடைபெற்று முடிந்தது” என்றார்.

சார்ந்த செய்திகள்