ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் ட்ராமா படம் ’சினம்’. இப்படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், “இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய்யுடன் இணைந்து நடித்ததில் ஒரு சிறந்த நடிகருடைய நடிப்பை நேரில் பார்த்த சந்தோசம் எனக்கு கிடைத்தது. அவர் இன்னும் நிறைய உயரத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு நிறைய திறமைகள் உள்ளன. அவருடைய பாடும் திறமையை பாராட்டியே ஆகவேண்டும். இவ்வளவு நன்றாக பாடுவார் என எனக்கு தெரியாது. இயக்குநர் குமரவேலன் திறமையான இயக்குனர், அவருடன் மூன்று படங்கள் பணியாற்றியுள்ளேன். அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும்கூட, அவர் இந்த படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது, அனைவரும் திரையரங்கில் பாருங்கள்” எனத் தெரிவித்தார்.