![vijay antony, arun vijay 'agni siragugal' teaser released](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rn6ts3RAY3CWKMGwvZ3_gFpA04eItU01D6uP5-zMtM8/1653653367/sites/default/files/inline-images/Untitled-8_12.jpg)
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. கடைசியாக இவர் நடிப்பில் 'கோடியில் ஒருவன்' படம் வெளியானது. தொடர்ந்து 'கொலை', 'மலை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' உள்ளிட்ட சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே நவீன் இயக்கத்தில் 'அக்னிக் சிறகுகள்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அருண் விஜய் மற்றும் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'அம்மா க்ரியேஷன்' சார்பாக டி.சிவா தயாரித்துள்ள இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் இப்படத்திற்கு 'ஜ்வாலா' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் 'அக்னிக் சிறகுகள்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பவர் ஃபுல்லான வசனங்கள் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கும் இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.