
தயாரிப்பாளர் கே. சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'மூன்றாம் கண்'. ஹைப்பர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு அஜீஸ் பாடல்களுக்கு இசையமைக்க ராஜ் பிரதாப் பின்னணி இசைக் கோர்வையைக் கவனிக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஆர்யா, கௌதம் மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர். ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கதையின் கதாபாத்திரங்கள் மேல் நோக்கி ஆர்வத்துடன் பார்க்க, அவர்கள் ஒரு கேள்விக்குறி போன்று காட்சியளிக்கிறார்கள். விரைவில் போஸ்ட் புரடக்சன் துவங்கவுள்ள இப்படத்தின் டீசர், டிரைலர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.