Published on 01/07/2023 | Edited on 01/07/2023
முன்னணி இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல் எழுத்தாளராக இருந்து வருகிறார். அவர் எழுதிய ‘கமலி அண்ணி’, ‘ரதிதேவி வந்தாள்’, ‘வசந்தமே வருக’ உள்ளிட்ட பல நாவல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் மேகலா சித்ரவேல் தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எம்ஜிஆர் பாடல்கள் குறித்து ஆய்வு செய்ததற்காக அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையில் மேகலா சித்ரவேல் பட்டம் வங்கியுள்ளார். அப்போது வெற்றிமாறன் அங்கிருந்து அவர் பட்டம் வாங்கியதை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேகலா சித்ரவேல், "வெற்றிமாறன் தான் என்னுடைய 4 வருடப் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டான். பெண்கள் எந்த வயதிலும் சாதனை செய்வார்கள். அதற்கு வயது ஒரு தடை கிடையாது" என்றார்.