Skip to main content

'வருணன்- காட் ஆஃப் வாட்டர் ' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

Published on 13/03/2025 | Edited on 13/03/2025

 

 varunan god of water movie trailer

யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள 'வருணன் - காட் ஆப் வாட்டர்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வருணன் - காட் ஆஃப் வாட்டர்' திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா,  சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி,  பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார்.  படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து கவனித்திருக்கிறார்.  

'நீரின்றி அமையாது உலகு' எனும் டேக் லைனுடன்  தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14ம் தேதி என்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் அன்புச்செழியன், இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, 'ஆஹா' டிஜிட்டல் தளத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் அன்புச்செழியன் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினரும், வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் பெற்றுக் கொண்டனர். 
 

சார்ந்த செய்திகள்