Skip to main content

நீ ஒர்த்தே இல்ல... வீட்டுக்குள் வந்தவுடன் கோபத்தின் உச்சத்தில் வனிதா

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு பெண்களை பற்றிய சரவணன் தெரிவித்த கருத்தே காரணம் என்று சொல்லப்பட்டது.
 

vanitha 2

 

 

நாமினேஷனில் இருந்த சாக்‌ஷி, அபிராமி மற்றும் லாஸ்லியாவில் யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கையில் சாக்‌ஷி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை வெளியான புரோமோவில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியான வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.
 

இந்நிலையில் இரண்டாவது புரோமோ வெளியான நிலையில் அதில் கவினை நீ ஒர்த்தே இல்லை என்று கூறி லாஸ்லியாவை அழைத்து பக்கத்தில் அமரவைத்துக்கொள்கிறார் வனிதா. கஸ்தூரியிடமும் ஏன் தர்ஷனுக்கும் ஷெரின் மாலை கொடுத்து போட சொன்னீர்கள் என்று கேட்டு அதகளம் செய்கிறார். 

 

 


 

சார்ந்த செய்திகள்