Published on 01/08/2018 | Edited on 01/08/2018
வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு கடைசியாக தயாரித்த 'ஸ்கெட்ச்' படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரித்துள்ளார். '60 வயது மாநிறம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ராதா மோகன் இயக்கியுள்ளார். இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, விக்ரம் பிரபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சத்தமே இல்லாமல் முடித்துள்ளார் இயக்குனர் ராதா மோகன். மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.