காங்கிரஸ் கட்சியில் இருந்துவந்த நடிகை குஷ்பு பா.ஜ.கவில் சேரப்போவதாக அடிக்கடி தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், அவர் நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதி அனுப்பினார். இந்நிலையில் எதிர்பார்த்த மாதிரியே பா.ஜ.கவில் குஷ்பு தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், குஷ்பு பா.ஜ.கவில் இணைந்ததற்கு காரணம் அவருடைய கணவர் சுந்தர்.சி தான் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்திருந்தார். இதற்கு சுந்தர்.சி, “எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னுடைய துறையே வேறு” எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குஷ்பு தரப்பு கூறுகையில், “தி.மு.கவில் இணைந்த காலத்திலிருந்தே இதுவரைக்கும் சுந்தர்.சி அவருடைய அரசியல் நிலைப்பாடுகளில் தலையிட்டது இல்லை. காங்கிரஸில் இருந்தபோதும் சரி, நேற்று பா.ஜ.கவில் இணையும்போது சரி அந்த இடத்தில் சுந்தர்.சி இல்லையே” என்றனர்.