![A student who spoke in Vijay style infront of vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/ofAvqyf_UXGekj7jtZkzwzlqDXBbXT8r-8gmvUT7Vpk/1719567889/sites/default/files/inline-images/vjstuni.jpg)
இந்தாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று(28-06-24) முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருதும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கி வருகிறார்.
இதில் பரிசு பெற்ற ஒரு மாணவி பேசியதாவது, “இப்ப, விஜய் அண்ணா கூட பரிசு வாங்குற தருணம் என் வாழ்க்கையில் முக்கியமான தருணமாக பார்க்கிறேன். இவ்வளவு நேரம், நேரம் ஒதுக்கி பரிசு கொடுத்ததற்கு அனைத்து மாணவர்கள் சார்பிலும் விஜய்க்கு மிகப்பெரிய நன்றி தெரிவிக்கிறேன். இதைத் தொடர்ந்து விஜய் அண்ணா செய்ய வேண்டும்” என்று கூறி விஜய்யிடம் பேசிய அவர், “அண்ணா, எங்க எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கு. அதை உங்க ஸ்டைல்ல கேட்கிறேன். இந்த எலெக்சன்ல நீங்க ஜெயிச்சு, செம்மையா ஆட்சி பண்றதுதான், நீங்க ஜெயிக்கக் கூடாதுனு நினைக்கிற எல்லோருக்கும் நீங்க கொடுக்கிற பெரிய பதிலடி” என்று விஜய் பட வசனத்தை பேசினார்.
மேலும் அவர் விஜய்யிடம், ‘அண்ணா ஒரு வேண்டுகோள். என்னுடைய அண்ணாவா என்னோட அப்பா அம்மா இரண்டு பேருக்கும் இந்த சால்வையை போர்த்தி அவங்கள் மரியாதை பண்ணனும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வேண்டுகோளை ஏற்று விஜய்யும், மாணவியின் பெற்றோருக்கு சால்வை போர்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.