![mr.chandramouli](http://image.nakkheeran.in/cdn/farfuture/4qAI1lqDeNp0V6BUuR_6SVKzasCRxB2431wS8pKjDJg/1533347662/sites/default/files/inline-images/mrchandramouli-banner728x90.jpg)
![sri reddy](http://image.nakkheeran.in/cdn/farfuture/W2SFiw7RGdyrpQzqyb5X3XLk2Q72pbuW2ZAd2WgALPk/1533347680/sites/default/files/inline-images/srireddy_1_0.jpg)
சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து சமீபத்தில் நடிகர் நானி மீதும் பாலியல் புகார் அளித்து திரையுலகை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்திய அவர் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார் கூறி பேசியபோது.... "தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர் பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன். இந்த ஒரு விஷயத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால். தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். கோவில் கட்டும் அளவுக்குக்கூட பாசம் வைக்கிறார்கள்" என்றார். இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புதிய புகாரால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.