Skip to main content
Breaking News
Breaking

மீண்டும் பாலியல் புகாருடன் ஸ்ரீரெட்டி... சிக்கித்தவிக்கும் ராஜமௌலி பட ஹீரோ 

Published on 12/06/2018 | Edited on 13/06/2018


 

sri reddy

 

சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

 


பின்னர் தன் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து சில காலம் அமைதி காத்த இவர் தற்போது மீண்டும் ஒரு புகார் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

 

 

 

sri reddy

 

உலகின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் தெலுங்கு பதிப்பின் இரண்டாம் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டது தெலுங்கு பிக்பாஸ் குழு. அதன்படி சமீபத்தில் நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் அவர் புகார் கூறிய பிரபல காமெடி நடிகர் விவா ஹர்ஷா ஆகிய இருவரும் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளனர் என்ற செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நானி திடீரென ஸ்ரீரெட்டி பங்கேற்றால் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டே வெளியேறிவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பிக்பாஸ் குழு உடனடியாக நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீரெட்டியின் பெயர் மட்டும் நீக்கியது.

 

sri reddy

 

இதனால் கடும் கோபமடைந்து கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி நானியை வார்த்தைகளால் வாட்டியெடுத்துவிட்டார். நானியை கடுமையாகத் திட்டி அவர் போட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், 'உன் தொழிலின் மீதும் குடும்பத்தின் மீதும் ஆணையாகச் சொல் நானி, என்னுடன் நீ தொடர்பில் இருந்ததில்லையென்று' என்றும் பதிவிட முடியாத வார்த்தைகளாலும் நானியை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

 

 


இதைத்தொடர்ந்து இந்த புகாருக்கு பதிலளித்த நடிகர் நானி... "இந்த விஷயத்திற்கு அவர்கள் எதிர்பார்த்தது போல் நான் தேவையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற போவதில்லை. சட்ட ரீதியாக மட்டும் அணுகி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுவேன். என் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார். அதற்கு ஸ்ரீரெட்டி... "சட்ட ரீதியாக அணுக நானும் தயார்" என சவால் விட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்