![Soori's speech at viduthalai 2 audio launch](http://image.nakkheeran.in/cdn/farfuture/CYVFP5937zZ9S8pRELjJFpujAq_xqZ-PCJYmHTDUsuc/1732703170/sites/default/files/inline-images/28_73.jpg)
விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடுதலை 2’. இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்க அவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ, மஞ்சுவாரியர், கிஷோர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், போஸ் வெங்கட், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் சூரி பேசுகையில், “டேய் தம்பிகளா மறந்துறுவேன் டா கத்தாதீங்க நீங்க கத்த கத்த சேது மாமா என்ன கலாச்சுட்டு இருக்காப்புல. என்ன மாமா ஃபுல்லா உன் ஆள இறக்கிட்டியானு கேட்டாப்புல. அதனால் உங்க எல்லோருடைய அன்புக்கு தேங் யூ. எங்க ஐயா நம்ம ராசா இளையராஜா ஐயா இந்த விழாவுக்கு மட்டும் கிடையாது காது குத்து. கோயில் திருவிழா என அனைத்து விழாவுக்கும் கடந்த 49 வருஷமா அவர்தான் ஒரே விழா நாயகன். எல்லாத்துலயும் அவர் பங்களிப்பு இருந்துருக்கு. சினிமாக்கு வரும்போது ஏறாத இடம் இல்ல பாக்காத வேலை இல்ல. அதையெல்லாம் பார்த்துவிட்டு வந்து அசந்தது படுத்துக்கெடக்கும்போது, பக்கத்து வீட்டு ஜன்னலில் ஐயாவுடைய பாட்டு கேட்கும். அப்படியே மெல்ல போய் அந்த வீட்டுக்காரன் கதவ தட்டுவேன். அவன் என்னாபானு? கேட்பான். அண்ணே கொஞ்சம் கதவ தெறந்து விடுணேனு சொல்லுவேன் அப்படியே காத்து வந்து அடிக்குற மாதிரி ஐயாவோட பாட்டு கேட்டும். அதை கேட்டு அப்படியே தூங்கினால் தாய் ஸ்தாணத்தில் அது ஆறுதல் கொடுக்கும். நம்முடைய வலிகள் பறந்து ரொம்ப தூறமா போய்டும். மறுநாள் காலைல வேலைக்கு தைரியமா போவோம். அப்படி ஒரு நம்பிக்கை கொடுக்கும். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இசைக்கடவுள் என்றும் தலை சிறந்த இசை மருத்துவர் என்றும் அவரை சொல்லிக்கிடே போகலாம் அந்தளவிற்கு எல்லா புகழுக்கும் ஐயா சொந்தகாரர்தான்.
நேத்து ஈவினிங் எனக்கு ஒரு ஃபோன் வந்துச்சு. ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மூனு மிஸ்டு கால் விட்டிருந்தாரு அத நான் லேட்டாதான் பாத்தேன். பாத்ததுன் என்னாச்சு ஏதாச்சுனு பதறிப்போய் திருப்பி கால் பண்ணி வணக்கம் சார்னு சொன்னேன். அதற்கு அவர் என்னங்க அந்த மனுசே பாட்டு போட்ருக்காரு அந்த தினம் தினம்-ன்ற பாட்ட எத்தன தடவ கேட்டேனு எனக்கே தெரியல கேட்டுடே இருக்கேன். உலகத்துல எல்லாத்துக்கும் ஆஃப்சன் இருக்கும் ஆனால் ஆஃப்சன் இல்லாத ஒரே ஆஃப்சன் இளையராஜா மட்டும்தாங்க, அவருக்கு ரீ பிலேஸ்மண்ட் யாருமே கிடையாது அவரு மட்டும்தான் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. பத்து நாளைக்கு முன்னாடி அந்த பாடல் வெளியீட்டு விழா அன்னைக்கு சாரோட ஆபீஸ் போறப்ப நான் முதல்ல வந்துட்டேன். ஐயாவோட ஆபிஸ் உள்ள யாரு இருக்காங்கனு? கேட்டேன். இளையராஜா ஐயாவைத் தவிர யாருமே இல்லனு சொன்னாங்க. அப்படியே வண்டிய ஓரங்கட்டுனு சொல்லி வெயிட் பண்ணு யாராவது வந்தததுக்கு அப்புறம் போவோம்னு சொன்னேன். அவரு கூட உட்கார்ந்து பேசுற அளவுக்கு நான் ஒரு ஆள் இல்லை. உள்ள போக பயத்துல இருந்தேன். அதுக்கப்புறம் சீக்கிரம் வாங்க சேது மாமா உள்ள பேசிட்டு இருகாங்கனு சொன்னாங்க. உடனே உட்ரா வண்டிய உள்ளனு ஐயா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு உட்கார்ந்துகிட்டு இருந்தேன். அவர் தன்னோட வாழ்கை அனுபவங்களை எங்களோடு பேசினார். இந்த சம்பவம் என் வாழ் நாளில் மிகப்பெரிய பொக்கிஷமா இருந்தது. என் சந்ததியே பாதுகாத்து வைக்க வேண்டிய பதிவு இது. ஐயாவுடைய இசையில் நான் நடிப்பது கனவுபோல் இருந்தது.
மஞ்சு வாரியரும் சேது மாமாவும் சேர்ந்து படத்துல டயலாக்கே இல்லமா ஒரு லவ் சீன் நடித்துள்ளனர். அதில் உன்ன எனக்கு புடுச்சுருக்கா? என்பதை வெளிக்காட்ட விஜய் சேதுபது நடிச்சுருக்காரு அது மிகப்பெரிய ஆக்டிங். அந்த சீன் பாக்கும் ரொம்ப கனெக்ட் ஆச்சு. இந்த படம் அவருக்கு இன்னும் பெரிய இடத்தை கொடுக்கும்னு நம்புறேன் அவருக்கு வாழ்த்துகள். வெற்றிமாறன் என்னை விடுதலைக்கு முன் சூரி விடுதலைக்கு பின் சூரி என்று மாத்தி எழுதும் அளவிற்கு மாத்திருக்காரு. வெற்றி மாறன் யுனிவர்சிட்டில விடுதலை என்ற டிகிரி படுச்சதுக்கு அப்பறம்தான் என் வாழ்க்கை மாறுச்சு. சினிமாவ நான் பாக்குற மாறி இருந்துச்சு இப்போ சினிமா என்ன பாக்குற மாறி நினைக்கிறேன். முன்னாடி என் படத்துல இருக்குற காமெடி நல்லா இருக்குனு சொல்லுவாங்க ஆனா இன்னைக்கு ஒரு நல்ல நடிகனா நீங்க இருக்கீங்கனு சொல்றாங்க. விடுதலைக்கு பிறகு கருடன், கொட்டுகாளி போன்ற படங்கள் எனக்கு நல்ல பேர வாங்கி கொடுத்துச்சு இது எல்லாத்துக்கும் காரணம் வெற்றிமாறன் மட்டும்தான். அவர் தொடங்குனதுதான் இப்போ இவ்ளோ தூரம் போய்டு இருக்குனு நினைக்கிறேன் அதற்காக நன்றி” என்றார்.