![sj surya act with vijay varisu movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/3OBz4AnW-iVqljNRFuzCasNH57TlqPabr1wRYI2CH7c/1658386557/sites/default/files/inline-images/1323.jpg)
விஜய், தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் ’வாரிசுடு’ என தலைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே சூர்யா பிறகு நண்பன், மெர்சல் ஆகிய படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது மூன்றாவது விஜய்யுடன் மீண்டும் வாரிசு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வாரிசு படத்தில் ராஜேந்திரன் என்ற பெயரில் அப்ளிகேஷன் டிசைனராக விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.