இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள Mr.லோக்கல் படம் மே17ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனைதொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
![sk](http://image.nakkheeran.in/cdn/farfuture/7mZ3vrWgYC9RXuz9gZv9bAYvNpTXkkl3kiLq-afNNt8/1557205112/sites/default/files/inline-images/sivakarthikeyan_6.jpg)
இதையடுத்து சிவகார்த்திகேயனின் 16வது படத்தை பாண்டிராஜ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மே-8ஆம் தேதி முதல் சென்னையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.
இந்த படத்தில் யார் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த அனு இம்மானுவேலை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. தமிழில் இவருக்கு இது இரண்டாவது படம் ஆகும். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷையும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படக்குழு அனு இமானுவேலைதான் கதாநாயகி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த பின் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.