Skip to main content

“என் வாத்தியார் முன்பு எப்படி பேசுவது என்று தெரியவில்லை” - சிங்கம் புலி

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
singam puli about sundar c in kadaisi ulagapor movie

ஹிப் ஹாப் ஆதி தனது சொந்த தயாரிப்பில் இயக்கி இசையமத்து நடித்துள்ள திரைப்படம் கடைசி உலகப்போர். இப்படத்தில் அனகா, நாசர், நடராஜ், சிங்கம்புலி, முனிஷ்காந்த், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் இணைந்து சிறப்பு விருந்தினராக சுந்தர்.சி பங்கேற்றார். 

இந்நிகழ்ச்சியின் சிங்கம்புலி சுந்தர்.சி. பற்றி பேசுகையில், “எல்லா மேடையிலும் பயமில்லாமல் நகைச்சுவையாக பேசிவிடுவேன். ஆனால் என் வாத்தியார் சுந்தர்.சி முன்பு எப்படி பேசுவது என்று தெரியவில்லை. ஆதியை இப்போது இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் சுந்தர்.சி தான். அதேபோல்தான் அவருடைய முதல் படமான அருணாச்சலத்தில் உதவி இயக்குநராக என்னை சேர்த்துக்கொண்டார். ஏழு வருஷம் அவரிடம் உதவி இயக்குநராக இருந்தேன். ஆனால் அவர் என்னை ஒருநாள் கூட போ என்று சொல்லவில்லை, என்னை படம் இயக்க சொல்லிக்கொண்டே இருப்பார். நான் தான் அவரை விட்டு ஓடிவிட்டேன்” என்று உருக்கமாக பேசினார். 

அதைத் தொடர்ந்து இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பற்றி சிங்கம் புலி பேசும்போது, “உடுமலைபேட்டையில் படப்பிடிப்பின்போது ஆதிக்கு அம்மை நோய் வந்துவிட்டது. நான் அவரை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டேன். இந்த அளவிற்கு அர்ப்பணிப்போடு இருக்ககூடிய ஆதியை, சினிமாவில் இருக்கிற நாம் அவரை கைவிடக்கூடாது. அதிகபட்ச ஒத்துழைப்பை ஆதிக்கு செய்தால்தான் அவர் மற்றவருக்கு செய்ய முடியும். இவரைபோன்ற இளையவருக்கு கொடுக்கும் ஆதரவுதான் சினிமாவுக்கு நாம் செய்யும் பெரிய ஆதரவு” என்றார்.

சார்ந்த செய்திகள்