ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் நடந்து முடிந்து, தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட்டில் உள்ள டோராடூனில் துவங்கியுள்ளது. இப்படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்ற 16ஆம் தேதி ரஜினிகாந்த் டேராடூனுக்கு சென்றுள்ளார்.மேலும் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கிய கதாபாத்திரங்களில் பாபி சிம்ஹா, அஞ்சலி, மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தின் நாயகியாக சிம்ரன் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பிரபல ஹிந்தி பட நடிகர் நவசுதீன் சித்திக் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் ரஜினி, விஜய் சேதுபதி சம்பத்தப்பட்ட காட்சிகளையும், சிம்ரன் சம்பத்தப்பட்ட காட்சிகளையும் சேர்த்து மொத்தம் 2 வாரங்களில் ரஜினி சம்பந்தப்பட்ட அணைத்து காட்சிகளையும் முடித்துவிட்டு, பின்னர் ஓரிரு மாதங்களில் இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.