'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட பிரச்சனையால் நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போடப்போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வரும், ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படம் வேகமாக வளர்ந்துவருகிறது. தெலுங்கில் வெற்றியைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் ட்ரைலர் ரஜினியின் 2.0 வோடு தியேட்டர்களில் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷாலை வம்புக்கு இழுப்பது போல் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.