டி.ராஜேந்திரனின் இளைய மகனும், சிம்புவின் சகோதரருமான குரளரசனின் நிக்காஹ் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக சிம்பு லண்டனில் இருந்து நேற்று சென்னை வந்திருந்தார்.
![simbu](http://image.nakkheeran.in/cdn/farfuture/PAtZuHJ9I38gomuisnhshZ23uhUCg_Dz2xRKVc67SLc/1556278432/sites/default/files/inline-images/simbu_14.jpg)
சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைக்கதான் லண்டன் சென்றிருந்தார். உடல் எடையை குறைத்துவிட்டு தமிழகம் வந்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி முன்னரே தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்ததைபோல இன்று தன்னுடைய சகோதரர் நிக்காவில் கலந்துகொண்டுள்ள சிம்பு எப்படி உடல் எடையை குறைத்திருப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்தார்கள். அதை சுரேஷ் காமாட்சி நிறைவு செய்திருக்கிறார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெள்ளை சட்டையில் சிம்பு செம சிளிம்மாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உண்மையிலேயே பெரிய ஷாக்காகதான் இருக்கிறது. இவ்வளவு குறைந்த மாதத்தில் இப்படி உடல் எடையை குறைத்துள்ளாரா? என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.