Skip to main content
Breaking News
Breaking

"நமக்காக தனது இறுதி மூச்சுவரை உரிமைக் குரலிட்டவர்" - சிபி சத்யராஜ் சிலிர்ப்பு!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

bfshsfbf

 

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98வது பிறந்தநாள் இன்று (03.06.2021) கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்ட நிலையில், பிரபலங்கள் பலரும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிபி சத்யராஜ் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

dgdgd

 

"நம் மொழிக்காக, நம் இனத்திற்காக தனது இறுதி மூச்சுவரை உரிமைக் குரலிட்டவர் தமிழ் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அவரது மரபு மற்றும் ஒப்பிடமுடியாத தலைமை பண்பு எப்போதும் நம்மிடம் இருக்கும். அவருக்கு நிகர் அவரே" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்