Skip to main content

திரைப்பட இயக்குநர் ஷங்கர் தயாள் காலமானார்!

Published on 20/12/2024 | Edited on 20/12/2024
Shakuni director Shankar Dayal passes away

கார்த்தியின் சகுனி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர் தயாள். அதன் பிறகு அவர், நீண்ட காலமாகப் திரைப்படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார். இதையடுத்து தற்போது, யோகி பாபுவை வைத்து குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. விரைவில் இப்படம் வெளியாகவிருந்தது. 

இதையொட்டி படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஷங்கர் தயாள் சென்றிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு அவரை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், ஷங்கர் தயாளின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் கூறியுள்ளனர்.

இவரது மறைவு திரையுலகினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திரை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதே போல் நேற்று முன் தினம்(18.12.2024) ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன்(65) உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து திரை கலைஞர்கள் உயிரிழந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்