ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமி, "தொலைந்து போயிருக்கலாம், ஆறுதலாவது உண்டு, தென்னங்கீற்று பந்தல் சிந்தும் ஒளியென நம்பிக்கையிருக்கும் திரும்ப வரலாமென்ற நினைப்பு, நினைப்பே உயிர் ஜோதி வளர்க்கும். வாழ போனவர்கள் திரும்ப வருகையில் நிகழும் பயணங்கள் மீதான காலத்தின் விபரீதப் போர் கோர விபத்துகள், விபத்துக்கு பின்னிருக்கும் ஒரு கவனமின்மை அக்கவனமின்மைக்கு பின்னே நான் போகவில்லை, இறப்பின் அஞ்சலி செலுத்தும் நேரமிது. பிழைத்தவர்கள் மறுபடி பிழைக்கச் செய்யும் தருணமிது. தப்பியவர்கள் இல்லம் வரும் மாலையிது. சுற்றி வந்து கைகொடுத்த கிராமத்து மனிதத்தை வாழ்த்தும் நிமிடமிது" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொலைந்து போயிருக்கலாம்
ஆறுதலாவது உண்டு,
தென்னங்கீற்று பந்தல் சிந்தும் ஒளியென நம்பிக்கையிருக்கும்
திரும்ப வரலாம்மென்ற நினைப்பு,
நினைப்பே உயிர் ஜோதி வளர்க்கும்.
வாழ
போனவர்கள்
திரும்ப வருகையில் நிகழும்
பயணங்கள் மீதான
காலத்தின் விபரீதப் போர்
கோர விபத்துகள்,
விபத்துக்கு… pic.twitter.com/1Bq1UYDbrr— Seenu Ramasamy (@seenuramasamy) June 3, 2023