உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் நிலையில் கரோனா கிருமியிடம் இருந்து நாட்டை காக்கும் நல்லோருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'வாழ்த்துப்பா' பாடல் ஒன்றை இயக்குனர் சீனுராமசாமி எழுதி வெளியிட்டுள்ளார். அந்தப் பாடல் வருமாறு....
![fd](http://image.nakkheeran.in/cdn/farfuture/lNNp_TNythiGWQJcLSW56IsIxloEblw-OnNbfoOHPDk/1587549145/sites/default/files/inline-images/9492c7ab-ceb9-4bc0-ad63-c602e533a6c7.jpg)
''மக்களைக் காக்கும்
மக்களே
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும் மக்களே
வாழ்க என்றும் வாழ்கவே
சுமந்து பெற்றவள்
எங்கள் தாய்
இன்று உயிரைக்
காப்பவள் செவிலித்தாய்
விண்வெளி உடையணிந்தாய்
விரைந்து பணி செய்தாய்
மக்களைக் காக்கும் இவள்
புனிதத் தாய்
வாழ்க என்றும் வாழ்கவே
தன்னையே அர்ப்பணம்
செய்து
மருத்துவம் செய்யும்
மருத்துவரே
நீயும் ஓர் தாய்க்கு
மகனல்லவா
எம் பிள்ளைகள் வணங்கும்
உனையல்லவா..
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும்
மகேசனே
![http://onelink.to/nknapp](http://image.nakkheeran.in/cdn/farfuture/f2-6VTdahUk7PVCzbD7NULmsVnFxGOu4I_v4Ab8hcRE/1586170537/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif.gif)
நெருப்பு வெயிலிலே
பொறுப்பாய் நிற்பவரே
முதலில் அன்பாய் சொன்னவரே
அறிந்து வருபவரை
அதிர விரட்டிக் காத்தவரே
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும் காவலரே
ஊரடங்கில் ஊரை
சுத்தம் செய்தவரே
நீல உடையில்
சாக்கடையைச் சரி செய்தவரே
நீங்கள் தொழிலாளியல்ல
தூய்மைத் தொண்டர்கள்
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும்
பெருந்தெய்வமே
அன்பும் அறமும்
தாழ்ந்து விடாது இனி
கொரோனா கிருமி
வாழ்ந்து விடாது''
என பாடல் எழுதியுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.