Skip to main content
Breaking News
Breaking

கரோனா தொற்றால் உயிரிழந்த டாக்டர்களுக்குப் பாடல் எழுதிய சீனு ராமசாமி!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020


தேசிய விருது வென்ற இயக்குனர் சீனு ராமசாமி, மற்றவர்களுக்குத் தன்னலமின்றி சிகிச்சை அளிக்கும் போது, கரோனா தொற்றால் தன்னுயிரை இழந்த டாக்டரின் தகன நடவடிக்கைகள் தொடர்பான இதயத்தைத் துளைக்கும் சம்பவத்தால் தூண்டப்பட்டு, பாதிக்கப்பட்ததால் அவர்களுக்கு இரங்கற்பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில்...

 

vdg

 

''கரோனா

 

உமைக் காக்க
தொட்டுத் தூக்கிய
மருத்துவன் மாண்டான்

 

வாழவா வழி கேட்டான்
அந்தோ சிதை நெருப்பைத்
தானம் கேட்டான்

 

தர மறுக்கும்
மனித மனமே 
நீ கைசுத்தம்
செய்தல் போல்
மனச்சுத்தம் செய்வாயா ?

சமபந்தி வைத்த வைத்தியனை
வைத்தெரிக்க கொள்ளி
இல்லையா..?

 

ஜாதி பார்த்தா 
இனம் பார்த்தா
மொழி பார்த்தா
வந்து வேக வைக்கிறது
கிருமி..

 

இருமாமல்
துப்பி விடு
உன் ஜாதியை
உன் மதத்தை

 

அய்யோ
கிருமி மனித
இனத்தை தேடுகிறது'' எனப் பாடியுள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.

 

சார்ந்த செய்திகள்