Published on 10/10/2018 | Edited on 10/10/2018
விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியிருக்கும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரசிகர்களிடையே ஹிட்டடித்தது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கும் இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில் 'சர்கார்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 19ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.