Skip to main content

கேரளாவிலும் சர்ச்சையில் சிக்கிய சர்கார் ! விஜய் மீது புதிய வழக்கு 

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
vijay

 

 

 

விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அ.தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி விஜய்யின் பேனர்களை  கிழித்தனர். இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயில் வீசி எரிக்கும் காட்சிகளை பட நிறுவனம் நீக்கியது. பின்னர் படத்தை மறுதணிக்கை செய்து திரையரங்குகளில் மறு வெளியீடு செய்தது படக்குழு. இந்நிலையில் தற்போது கேரளாவிலும் 'சர்கார்' படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. திருச்சூரில் உள்ள தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் பேனர் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு திருச்சூர் சுகாதார துறை எதிர்ப்பு தெரிவித்து விஜய் மற்றும் கேரள விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே கேரளாவிலுள்ள கொல்லத்தில் 'சர்கார்' படத்திற்காக நடிகர் விஜய்க்கு 175 அடியில் பேனர் வைத்து பின்னர் அதற்கு கேரள அரசு தடை விதித்ததையடுத்து அந்த பேனர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்கார் பட விவகாரம்; ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு...

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

High Court Cancelled case on Murugadoss basses on Supreme Court Order

 

சர்கார் பட விவகாரம் தொடர்பாக  இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டன. இதனால் அரசின் திட்டங்களைத் தவறாகக் குறிப்பிடுவதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தனக்கு எதிரான புகார், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அளிக்கப்பட்டதாகவும், அதனால் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

 

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தண்டபாணி பிறப்பித்த உத்தரவில், திரைப்படம் தணிக்கை முடிந்த பிறகு தான் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சூட்டிகாட்டிய நீதிபதி, அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமை எதிராகப்  பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ரத்து செய்வதாக தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 


 

Next Story

“தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - ஏ.ஆர். முருகதாஸ்

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

 

சர்கார் படத்தில் இலவசங்களை விமர்சித்த காரணத்திற்காக ஏ.ஆர். முருகதாஸ் மீது தேவராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதனால் முருகாதாஸ் கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி இருந்தார். இன்று நடந்த இவ்வழக்கில், “அரசின் நலத்திட்டங்களை விமர்சித்தற்காக தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது. இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்று உத்தரவாதமும் தர முடியாது. படத்தில் காட்சிகளை அமைப்பது எனது கருத்து சுதந்திரம்” என்று ஏ.ஆர் முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

டிசம்பர் 13ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதுவரை இயக்குனர் முருகதாஸை கைது செய்ய தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.