Published on 21/09/2023 | Edited on 21/09/2023
![sai pallavi to pair with naga chaitanya in new movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/e_I8DKiX2GDnkPPLgsk_bprAgFlLrQU94qBX85YOKCE/1695303143/sites/default/files/inline-images/66_64.jpg)
நாக சைதன்யாவின் 23வது படத்தை, சந்து மொண்டேடி இயக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அல்லு அரவிந்த் வழங்குகிறார். இப்படத்தை பன்னி வாசு தயாரிக்கிறார். தற்போது, ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார். மேலும், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை விரைவில் தயாரிப்பு குழு அறிவிக்கவுள்ளனர்.