கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், படம் பற்றி ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “இப்பட கதையை கேட்டவுடன் எனக்கு பிடித்து போனது. இதில் என்னுடைய அரசியல் நையாண்டி வசனங்கள் இருக்காது. கதிர் என்ற ஒரு பையன். அவனுக்கு ஒரு கனவு. அதை அடைந்தானா இல்லையா என்பது தான் கதை. படத்தில் அன் ஷீடல் (annsheetal), மீனாட்சி சௌத்ரி என இரண்டு ஹீரோயின்கள். நல்ல ரோல்களில் நடித்துள்ளர்கள்” என்றார். கோகுல், “படத்தில் ஒரு முக்கியமான நடிகர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவர் விஜய் சேதுபதி இல்லை. ஆனால் அது ஸ்கிரீனில் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும்” என்றார்.