தன் படங்கள் மூலம் அதிரடியான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை வெளியிட்டு, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இயக்குனர் ராம் கோபால் வர்மா எப்போதும் சமூக வலைத்தளத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சமீபத்தில் பிரதமரின் விளக்கு ஏற்றும் வேண்டுகோளுக்கு இருட்டில் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றி சர்ச்சையை உண்டாக்கிய அவர், தற்போது போதைக்காக கைகழுவும் சானிடைசர்கள் மற்றும் திரவங்களை குடித்து ஏற்பட்ட உயிர்ப்பலிகளின் எதிரொலியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வீடுகளுக்கே மதுபானங்கள் டெலிவரி செய்ய முடிவு செய்து இருப்பதாக வெளியான தகவல் தொடர்பாக ராம் கோபால் வர்மா சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...
![vxv](http://image.nakkheeran.in/cdn/farfuture/nVt4hd8lHqsN2qRi9FJNZOc051ixI8Bn9G0WmefvWGA/1586779414/sites/default/files/inline-images/Untitled-2_19.jpg)
''தெலுங்கானா முதல் மந்திரிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். சலிப்படைந்தவர்கள், தலையை பிய்த்து கொள்பவர்கள், குழந்தைகளைப் போல அழுபவர்கள், மனநல மருத்துவமனைகளில் சேருபவர்கள், விரக்தியில் கணவர்களால் தாக்கப்படும் மனைவிகள், மம்தா பானர்ஜி போன்று பெரிய மனது வைத்து எங்களுக்கு சியர்ஸ் கொடுங்கள்!'' என பதிவிட்டுள்ளார். ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.