![rakul](http://image.nakkheeran.in/cdn/farfuture/xVz5_W-tYwusqdyf7gFRZPYmoP94ywP6wniIi-x_V2g/1533347632/sites/default/files/inline-images/Rakul-Preeth-Singh-Stills-At-Nannaku-Prematho-Movie-Success-Interview-07.jpg)
'தீரன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடுத்ததாக சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி கதாநாயகர்களுடனும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அஜய் தேவ்கனுடன் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கெதிரான வதந்திகளுக்கு விளக்கமளித்து ரகுல் பேசியபோது... "இந்தி படத்தில் நடித்து வருவதால், எனக்கு தென்னிந்திய மொழிகளில் படங்கள் குறைந்துவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். தென் இந்திய மொழி படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். தமிழ் ரசிகர்கள் என்னை தமிழ் பெண்ணாக பார்க்கிறார்கள். அதேபோல் தெலுங்கு ரசிகர்கள் என்னை தெலுங்கு பெண்ணாக பார்க்கிறார்கள். நடிகைகள் எந்த மொழி படத்தில் நடிக்கிறார்களோ அந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும். மொழி தெரியாமல் நடித்தால் சிறப்பாக இருக்காது. இதற்காக நான் தமிழையும் கற்று வருகிறேன்.சினிமாவில் நிலைத்து நிற்க திறமை தான் மிகவும் முக்கியம். திறமை இல்லாத நடிகைகளை அழகாக இருந்தாலும் ஒதுக்கிவிடுவார்கள்" என்றார்.