தோனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பின்னர் கபாலி படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு தென்னிந்திய இயக்குனர் மேல் #MeToo வில் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் மீண்டும் #MeToo குறித்து தற்போது பேசியுள்ளார். அதில்...
"நான் மீடூ இயக்கத்தை நூறு சதவீதம் ஆதரிக்கிறேன். பாலியல் துன்புறுத்தலை எந்த விதத்திலும் சகிக்க முடியாது. இது இப்போது அத்தியாவசியமான ஒரு இயக்கமாகி விட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமையை பகிரங்கப்படுத்துவதும் அவர்களுக்கு ஆதரவாக சமூகத்தில் குரல்கள் எழுவதும் ஆரோக்கியமான ஒரு விஷயம். ஆனால் 'மீடூ' விஷயத்தில் புகார் கூறும் பெண்களிடம் ஆதாரம் கேட்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற விஷயங்களில் எப்போதும் ஆதாரத்தை சேகரித்து கையில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்ட முடியாது. நாம் நம் எதிர்ப்பை காட்டாவிட்டால் அதையே அவர்களுக்கான வசதியாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தவறு செய்வார்கள். ஒருமுறை என்னுடைய பின்புறத்தை ஒருவன் தட்டிவிட்டு சென்றான்.சிறிது நேரத்தில் நான் அதை மறந்துவிட்டேன். ஆனால் சுற்றிலும் இருந்தவர்கள் அதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார்கள்" என்றார்.