Skip to main content
Breaking News
Breaking

வெளியானது ஜோதிகா படத்தின் பெயர் 

Published on 20/04/2018 | Edited on 21/04/2018
jyothika


நடிகை ஜோதிகா நாச்சியார் படத்திற்கு தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'மொழி' படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இயக்குனர் ராதாமோகன் டைரக்ஷனில் 'துமாரி சுலு' ஹிந்தி பட ரீமேக்கில் ஜோதிகா நாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் விதார்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்க இருக்கின்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் ராதாமோகன், இந்த படத்தின் தலைப்பை கண்டுபிடிக்கும் படி ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். அதன்படி தற்போது அதற்கான விடையாக  இப்படத்திற்கு ‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதனுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள், சென்னையில் உள்ள ‘ஹலோ எப்.எம்.’ ஸ்டேஷனில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்