Skip to main content

வலுக்கும் 24ஆம் புலிகேசி பிரச்னை... நஷ்ட ஈடு தரும் வடிவேலு...?

Published on 09/05/2018 | Edited on 10/05/2018
irumbu thirai.jpeg

 

vadivelu


வடிவேலு நடிப்பில் உருவான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற பெயரில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு  சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். இப்படப்பிடிப்பில் பத்து நாட்கள் நடித்த வடிவேலு இயக்குனருடன் கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகினார். இதனால் படகுழுக்கு நஷ்டம் ஏற்பட்டு வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சங்கம் வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டதற்கு பதில் அளித்த வடிவேலு பட வேலைகளை தொடங்குவதில் தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தொடர்ந்து இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க இயலாது என்று பதில் அளித்தார். 

 

 

 

இதனால் ஒரு வருடத்துக்கும் மேலாக படப்பிடிப்பு முடங்கி உள்ள நிலையில் படத்துக்காக போடப்பட்ட அரங்குகளும் பிரிக்கப்பட்டு விட்டன. மேலும் தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் பல கட்டங்களாக சமரச முயற்சி மேற்கொண்டும் வடிவேலு பிடிவாதமாக அந்த படத்தில் நடிக்க மறுத்து வருகிறார். இதனால் படத்தை நிறுத்தி விடுவது குறித்து இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடக்காததால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு பெற்று தரும்படி படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்திடமும் அணுகி உள்ளனர். மேலும் இந்த பிரச்சினையில் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராகி வருகிறதனால் வடிவேலுக்கு நடிக்க தடை விதித்தாலோ அபராதம் விதித்தாலோ அதை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்ந்த செய்திகள்