Skip to main content

தயாரிப்பாளர் குஞ்சுமோனின் திடீர் அறிவிப்பு!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
kunjumon

 

 

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் முதல் படம் ஜென்டில்மேன். இந்த படத்தில் அர்ஜூன், கவுண்டமணி, மதுபாலா, மனோரம்மா உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். 1993ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் ஆல்பமும் க்ளாஸிக் ஹிட்டானது.

 

இப்படத்தை தயாரித்தவர் கே.டி. குஞ்சுமோன், பல வெற்றி படங்களை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்தவர் தற்போது சினிமா துறையில் எந்த படங்களையும் தயாரிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் கூறுகையில், “'ஜென்டில்மேன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டானது. 'ஜென்டில்மேன்' படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டத்தை 'ஜென்டில்மேன் 2'-ல் காணலாம்.

 

நவீன தொழில்நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் 'ஜென்டில்மேன் 2' உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்த படம் தயாராகவுள்ளது.

 

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 'ஜென்டில்மேன் 2' பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். உலகம் முழுவதும் முதலில் திரையரங்குகளில் வெளியான பிறகுதான் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.