Published on 09/04/2019 | Edited on 09/04/2019
![priya varrier](http://image.nakkheeran.in/cdn/farfuture/vhhaonNY9WQZTzKJ-lUPhEYwrFYNYbB2GZb-6Hb8m48/1554788550/sites/default/files/inline-images/priya-prakash-varrier-hd-photos-1.jpg)
கண் சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியர் நடிப்பில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே அவர் நடித்த ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை அவதூறு செய்வதுபோல் காட்சிகள் உள்ளது என்று அவரது கணவர் போனிகபூர் எதிர்த்து வருகிறார். இதனால் கடும் வருத்தத்திலும், கவலையிலும் இருக்கும் பிரியா வாரியர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.