தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசி காந்த் இயக்கும் 'டெஸ்ட்', நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம், மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது. இப்படத்தை 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்க முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் கே.எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமன் இசையமைக்கிறார். 'அன்னபூரணி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் டைட்டில் ரோலில் நயன்தாரா நடித்துள்ளார். டிசம்பர் 1ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இப்பத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்ரைலரில், பார்க்கையில் பெரிய செஃப் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் நயன்தாரா. அதற்காக வீட்டின் எதிர்ப்பை மீறி பல முயற்சிகளை மேற்கொள்கிறார். இறுதியில் அவரது கனவு நிறைவேறியதா இல்லையா என்பதை எமோஷ்னல் அதிகம் கலந்த ஒரு படமாக சொல்லியிருப்பது போல் தெரிகிறது. மேலும் ட்ரைலரில் வரும், “நான் பிறப்பிலே செஃப் ஆகிற தகுதியை இழந்துட்டேன்” என்று வரும் வசனம், “இங்க எந்த கடவுளும் கறி சாப்பிட்டா தப்புனு சொன்னதில்ல...” என்று வரும் வசனங்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுவரை யூட்யூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.