Skip to main content

“எனக்கு டார்ச்சர் தொடர்கிறது”-பிரதமர் மோடியின் உதவியை நாடும் பிக்பாஸ் மீராமிதுன்...

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

மீரா மிதுன் இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சேரனுடைய மேன்ஹேண்ட்லிங் சரியாக இல்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் போட்டியில் இருந்து வெளியேறினார். பிபி வீட்டிற்குள் சென்றபோதும், அங்கிருந்து வந்ததில் இருந்தும் மோசடி குற்றச்சாட்டுகள் மீரா மிது வைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து மீரா மிதுன் தன்னுடைய மேனேஜருடன் உரையாடும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அதில் ஜோ மைக்கெல் என்ற தொழிலதிபரை கொலை செய்யுமாறு பேசியிருப்பார். இதன்பின் மீரா மிதுன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 

narendra modi

 

 

பிபி வீட்டைவிட்டு வெளியே வந்தபின்னர் பல விஷயங்கள் குறித்து சர்ச்சையாக பேசி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்கள் தனது போன் நம்பரை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் இதனால் தேவையில்லாத போன் கால்கள் வருவதாக கூறினார். இதுகுறித்து புகார் கொடுத்தும் போலீஸ் எந்தவித நடவடிக்கைவில்லை என்று பேட்டியளித்தார். ஜெயலலிதா இறந்தபின்னர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கருத்து தெரிவித்தார். 

இந்நிலையில் நேற்று எழும்பூர் காவல் நிலையத்தில் இருந்து மீரா மிதுனிடம் சப் இன்ஸ்பெக்டர் பேசியதாகவும், அவர் தன்னிடம் ரூடாக நடந்துகொண்டதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ஆதாரங்களை சில ஊடகங்களுக்கு ஷேர் செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

இதனைதொடர்ந்து, “எனக்கு அநீதி இழைத்த சென்னை போலீசார் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கவில்லை. ஆனால் சீர்குலைவை பாதுகாக்கிறார்கள். போலீசார் சட்டத்தை அமல்படுத்தும் போது அந்த சட்டத்தை பின்பற்றவும் வேண்டும். ஒராண்டாக எனக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இன்னும் எனக்கு டார்ச்சர் தொடர்கிறது” என்று இந்திய பிரதமர் மோடிய ட்விட்டரில் டேக் செய்து முறையிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்