Published on 22/07/2023 | Edited on 22/07/2023

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள மத்தகம் வெப் சீரிஸை, இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்,
இந்த வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரில், மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் போல் அமைந்துள்ளன. மேலும் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும், மணிகண்டன் முதல் முறையாக ஒரு வில்லத்தனம் மிகுந்த கேங்ஸ்டராகவும் தோன்றுகிறார்கள்.